தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சமீபத்தில் பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம் 2 தவிர மீதமுள்ள நான்கு படங்களுக்கு மாற்றாக புதிதாக மூன்று முதன்மை பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் மருத்துவம் அல்லது பொறியியல் என ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் பதினொன்றாம் வகுப்பு பாடப் பிரிவுகளுக்கு இனி பழைய நடைமுறையே தொடரும் என புதிய பாடத்திட்டம் முறை ரத்து செய்யப்படுவதாகவும், பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய அரசாணையின்படி ஆறு பாடங்கள் என்ற பழைய நடைமுறையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.