திருச்சி மாவட்டம் அதவத்தூர் பாளையம் அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
சிறுமியின் உடல் கிடப்பதாக அடையாளம் காட்டிய உறவினர்கள் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். சிறுமி உடல் கிடந்தது எப்படி தெரியும் என்ற கோணத்தில் இரண்டு பேரிடம் விசாரணை நடக்கிறது. இரண்டு பேரின் செல்போனில் சிறுமியின் புகைப்படங்கள் இருப்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராமன், திருச்சி சரக டி.ஐ.ஜி ஆளி விஜயா, திருச்சி எஸ்.பி ஜியாவுல்ஹக் விசாரணை மேற்கொள்கிறார்கள். பிரேத பரிசோதனைக்கு பின்னரே பாலியல் வன்கொடுமை நடந்ததா ? என்பது தெரியவரும்.