அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30லட்சத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. 215க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனாவின் தாக்கத்துக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், 66 லட்சம் 42ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகளவில் கொரோனாவில் சிக்கி கொண்டு அல்லோலப்படும் நாடாக அமெரிக்கா இருந்து வருகின்றது. அங்கு மட்டும் பாதிப்பு 30 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 50,586 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 30,40,833ஆக உள்ளது. புதிதாக 378 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 1,32,979ஆக உள்ளது.
நேற்று மட்டும் 35,383 பேர் தொற்றில் இருந்து மீண்டதால் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்ககை 13,24,947ஆக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 15,82,907 பேரில் 15,198 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். உலகிற்க்கே சிம்ம சொப்பனமாக விளங்கிய அமெரிக்காவுக்கு கண்ணுக்கு தெரியாத வைரஸ் மிகப்பெரும் தலைவலியாக கொடுத்துள்ளது.