தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் :
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. நாகை மாவட்டம், மணல்மேடு, குத்தாலம், நங்கை நல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது குறுவை சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் பயிர்களில் கதிர்கள் விரைவாக வெளி வரும். என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், பெருங்காவூர், நெடுஞ்சேரி, லாஸ்பேட்டை, சேத்தியாத்தோப்பு, மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. புதுச்சேரி முத்தியால் பேட்டை, ராஜ்பவன், உப்பளம், நெல்லித்தோப்பு , உள்ளிட்ட இடங்களிலும் திருக்கனுர், மதக்களிபட்டு, பத்துக்கண்ணு, மடிக்கரை ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக மழை பெய்த காரணமாக சாலைகளின் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.