சீனாவில் மருத்துவர்களால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்ட நபர் 2 மாதம் கழித்து மீண்டும் உயிருடன் வந்தது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சீனாவின் சோங்கிங் (Chongqing) என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜியாவோ (Jiao).. 43 வயதுடைய இவர் மனநலக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.. இந்த சூழலில் ஜியாவோ இந்தாண்டு தொடக்கத்தில் காணாமல் போய்விட்டார்.. பின்னர் ஜியாவோவின் குடும்பத்தார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், போலீசார் அவரை பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் ஜியாவோவின் குடும்பத்தாரை தொடர்ந்து கொண்டு அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.. இதையடுத்து குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்ற போது, மருத்துவர்கள் ஜியாவோ கடுமையான காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகாவும், பிழைப்பது ரொம்ப கடினம் எனவும் கூறினர்.
அவர் முகத்தில் ‘மாஸ்க்’ அணிந்திருந்தால் முகத்தை குடும்பத்தாரால் சரியாக பார்க்க முடியவில்லை.. இந்த நிலையில் தான் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். பின்னர் அவருக்கு £15,965 ( இந்திய மதிப்பு 14,92,165.71) செலவில் பிரம்மாண்டமாக இறுதிச்சடங்கு நடத்திய குடும்பத்தார் உடலை நல்லடக்கம் செய்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் ஜியாவோ குடும்பத்தாருக்கு போலீசாரிடம் இருந்து போன் கால் வந்தது. அப்போது, வீடு இல்லாமல் சாலையில் வசிக்கும் நபர் தன் பெயர் ஜியாவோ என கூறுவதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து நேரில் சென்ற குடும்பத்தார் ஜியாவோ உயிருடன் இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர்.. ஆனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் நடந்ததை விளக்க முடியவில்லை.
இதையடுத்து ஜியாவோ குடும்பம் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று நடந்ததை கூறியபோது தான் அதிர்ச்சி உண்மை வெளிவந்தது. ஆம், அதாவது ஜியாவோ போலவே அச்சுஅசல் அப்படியே இருக்கும் நபர் தான் காசநோயால் இறந்துள்ளார்.. ஆனால் அவரது பாக்கெட்டில் ஜியாவோ அடையாள அட்டை இருந்ததால் மருத்துவர்கள் தவறாக புரிந்து கொண்டது தெரியவந்தது.. அதனைத்தொடர்ந்து தொடர்ந்து ஜியாவோ குடும்பத்தார் மருத்துவமனை நிர்வாகம் செய்த தவறுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்.