பயனாளர்களின் தகவல்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடிய 25 ஆப்களை உடனே மொபைலில் இருந்து நீக்க கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்காகவே சில செயலிகள் பிளே ஸ்டோரில் இருக்கிறது.. இதுபோன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பதால் பயனர்களின் தகவல்கள் திருடு போகும் அபாயம் இருக்கிறது. கடந்த மாதத்தில், மட்டும் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் 50 செயலிகளுக்கு கூகுள் நிறுவனம் தடை விதித்தது.
இந்நிலையில் அதேபோன்ற 25 ஆபத்தான ஆப்களின் பட்டியலை கூகுள் மற்றும் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான எவினா ஆகிய நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
அதன்படி, Super Wallpapers Flashlight, Padenatef, Wallpaper Level, Contour Level wallpaper, iPlayer & iWallpaper, Video Maker, Color Wallpapers, Pedometer,Powerful Flashlight, Super Bright Flashlight, Super Flashlight, Solitare Game, Accurate scanning of QR code, Classic card game, Junk file cleaning, Synthetic Z, File Manager, Composite Z, Screenshot Capture, Daily Horoscope Wallpapers, Wuxia Reader, Plus Weather,Anime Live Wallpaper, Health Step Counter ஆகிய ஆப்கள் பயனாளர்களின் மொபைலில் இருந்தால் அதனை உடனடியாக நீக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.