Categories
தேசிய செய்திகள்

ஈவு இரக்கிமின்றி… தத்தெடுத்த குழந்தையை கொன்ற குடும்பத்தினர்… இதுதான் காரணமா?

தத்தெடுக்கப்பட்ட சிறுவனை குடும்பத்தினரே ஈவு இரக்கிமின்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தான் இந்தக் கொடூர சம்பவம்  அரங்கேறியுள்ளது.. அந்தக் கிராமத்தில் வசிக்கும் ஸ்வர்ணலதா என்பவர் குழந்தை இல்லாத காரணத்தால் போலி ஆவணங்களைத் தயார்செய்து, சுமார் 2 லட்சம் ரூபாய் பணம் செலவழித்து அந்த 3 வயது சிறுவனைத் தத்தெடுத்துள்ளார்.

பின்னர் சில நாட்கள் கழித்து, அந்த சிறுவனின் உடல்நிலையில் ஒருவித மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு அந்த சிறுவனை அழைத்துச் சென்றுள்ளார் ஸ்வர்ணலதா.. அங்கு மருத்துவர்கள் இந்த சிறுவன் சிறு வயதிலேயே முதுமை அடைந்ததைப் போன்று தோற்றமளிக்கும் dementia என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்..

இதனால், ஸ்வர்ணலதாவின் மாமனார் ராமு சவுகலே என்பவர் இந்தக் குழந்தை நமக்கு இனிமேல் வேண்டாம் என்றும், அவனைக் கொலை செய்து விடலாம் என்றும் விடாப்பிடியாகத் தெரிவித்து விட்டார்.. பின்னர், மருத்துவர் மாருதி முசாலே மற்றும் அவரது மனைவி ரேகா முசாலே ஆகியோரின் உதவியுடன் அந்தசிறுவனைக் கொலை செய்து விட்டு, தங்களுக்குச் சொந்தமான இடத்தில் புதைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநில பெண் மற்றும் குழந்தைகள் நலத்துறையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள சிக்கோடி போலீசார் 2 மருத்துவர்களையும், குழந்தையை கொல்ல யோசனையளித்த ஸ்வர்ணலதாவின் மாமனார் ராமு சவுகலேயையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |