தன் மகனின் பிறந்த நாளன்று ரோலெர்கோஸ்டரில் சென்ற பெண் தவறி விழுந்து மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
பிரான்சை சேர்ந்த elodie duval என்ற பெண் தனது மகனின் பிறந்தநாளை தீம் பார்க்கில் கொண்டாட சென்றுள்ளார். அப்போது ரோலர் கோஸ்டாரில் கணவர் அருகில் அமர்ந்திருந்த elodie திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். கணவன் மனைவியை காப்பாற்ற முயற்சி செய்தும் அவரால் காப்பாற்ற இயலவில்லை அங்கிருந்தவர்கள் பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து அவர்களாலான முயற்சிகளை செய்தும் பயனளிக்காத நிலையில் பரிதாபமாக உயிர் இழந்தார். பிறந்தநாளை கொண்டாடும் ஆர்வத்தில் இருந்த குழந்தை அல்லேன் அம்மா எங்கே என்று கேட்க அம்மா சொர்க்கத்திற்கு சென்று விட்டார் என்று கூறியது குழந்தை புரிந்துகொள்ள இயலவில்லை. elodie ரோலர் கோஸ்டாரில் இருந்து விழுந்து மரணம் அடைந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.