Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதைவிட எனக்கு குடும்பம் முக்கியம்…. பெரிய பொறுப்பை உதறிய டிராவிட்…!!

தன் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாது என்று இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருப்பதை டிராவிட் மறுத்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

விராட் கோலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த 2017 ல் இந்திய அணி பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் அணில் கும்ளே. இதனால் ராகுல் திராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன, ஆனால் தனிப்பட்ட காரணம் கூறி அப்பதவியை மறுத்து விட்டதாக வினோத் ராய் கூறினார். தனியார் இணையதளம் ஒன்றில் பேசிய பிசிசிஐ தலைவர் வினோத்ராய் கூறுகையில், “இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்க ட்ராவிட்டிடம் கேட்டபோது எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். பயிற்சியாளர் பதவியை ஏற்பதால் என்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாது.

நான் என்னுடைய குடும்பத்துடன் இருக்க விரும்புவதால் இப்பதவி எனக்கு வேண்டாம் என வெளிப்படையாக கூறினார். அவர் பக்கம் யோசித்து பார்த்தால் அது நியாயம் என்றே எங்களுக்கு தோன்றியது. அவர் மனதில் என்ன இருந்ததோ அதை கூறினார், நாங்களும் அவரின் கருத்தில் நியாயம் இருந்ததால் ஏற்றுக்கொண்டோம். பிறகு அவரிடம் தொடர்ந்து பேசி 19 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் அணிக்கு பயிற்சியாளராக இருக்க சம்மதம் வாங்கினோம். தற்பொழுது இளம் வயது வீரர்களை சிறப்பாக வழிநடத்தி டிராவிட் நெருக்கமாக பழகி நல்ல முறையில் அவர்களை உருவாக்கி வருகிறார்” அவர் கூறினார்.

Categories

Tech |