Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்கள் கையில தான் இருக்கு…. நாங்க வீடு வீடா செல்கின்றோம்…. முதல்வர் வேண்டுகோள் …!!

ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து இருந்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்று தினம்தோறும் சுகாதாரத் துறை மூலமாக வெளியிடப்பட்டிருக்கிறது. வாழ்வாதாரங்களுக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பக்கம் நோய் பரவலை தடுக்க வேண்டும், அதேவேளையில் வாழ்வாதாரத்தையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும். இது தான் அரசின் கடமை . முழுக்க ஊரடங்கு பிறப்பித்துக் கொண்டிருக்க முடியாது. மார்ச், ஏப்ரல், மே, ஜூன் என ஊரடங்கு போட்டுள்ளோம்.

இது தொடர்ந்து இருந்தால் வாழ்வாதாரம் பாதிக்கும். பொருளாதாரம் பாதிக்கும். ஆகவேதான் முடிந்த அளவுக்கு ஊரடங்கு மூலமாக நோய் பரவலைத் தடுத்து மக்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்க அரசாங்கம் முயற்சி எடுத்து வருகின்றது. ஊரடங்கிற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. ஊரடங்கு மூலமாக பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கின்றது. இது முழுக்க முழுக்க மக்களுடைய கையில்தான் இருக்கிறது. மக்கள் எந்த அளவிற்கு அரசினுடைய வழிகாட்டுதல்களை கடைபிடித்தால், இந்த நோய் பரவல் நிச்சயமாக குறையும்.

தெருத்தெருவாக ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றோம். துண்டுபிரசுரங்கள் மூலமாக இந்த நோய் எப்படி வருகிறது ? என்பது போன்ற விவரங்கள் எல்லாம் ஒவ்வொரு வீடாக கொண்டு இருக்கின்றோம். ஆகவே மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த நோய் பரவலை தடுப்பதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றது என்பதையும் மக்களுக்கு  தினந்தோறும் எடுத்துரைத்து வருகின்றோம். பொதுமக்களுடைய முழு ஒத்துழைப்பு தான் மிக மிக முக்கியம். நோய் பரவலை தடுப்பதற்கு பொதுமக்களுடைய முழு ஒத்துழைப்பு வேண்டும். அரசு அறிவிக்கின்ற வழி முறைகளை முழுமையாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |