திமுக ஆட்சி காலத்தில் புயல், வெள்ளம் வந்த போது எவ்வளவு நிவாரணம் கொடுக்கப்பட்டது என முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிண்டியில் 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி காலத்தில் புயல், வெள்ளம் வந்தது போது எவ்வளவு கொடுத்து இருக்கிறார்கள்? என்பதை எண்ணிப் பாருங்க. அரசாங்கத்தினுடைய நிதி நிலைக்கு ஏற்றவாறு இன்றைக்கு அம்மாவின் அரசு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் ஜூலை மாதம்வரை விலையில்லா பொருட்களை ரேஷன் கடையில் வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் ஏழை எளிய மக்களுக்கு அரசின் மூலமாக பல்வேறு சலுகைகள் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் விலையில்லா அரிசி கொடுக்கிறோம். பருப்பு, சர்க்கரை, எண்ணெய் விலையின்றி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல அமைப்பு சாரா தொழிலாளர் களுக்கும் நிவாரணம் ரூ 2000 கொடுத்துள்ளோம். மீண்டும் உதவித்தொகை கொடுப்போம், அதேபோல விலையில்லா அரிசி, எண்ணெய், பருப்பு கொடுப்போம்.
அனைத்து குடும்ப அட்டைக்கும் ரூ. 1000 கொடுத்துள்ளோம்.சென்னை, மதுரை என முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதியில் 1000 ரூபாய், அரிசி, பருப்பு வழங்கி வருகின்றோம். அதேபோல குடிசைப்பகுதியில் வாழ்கின்றவர்கள், சாதாரண அடித்தட்டு மக்கள் ஒருவாரம் தங்கி சிகிச்சை பெறுகின்ற காலத்தில் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு கொடுக்கபட்டுள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.