புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உச்சிப்பாறை குளத்தில் ஆண் ஒருவரின் உட….ல் ஒன்று மிதப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று அந்த உடலை கைப்பற்றி திருமயம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். பின்னர் இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்..
இந்த விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டவுன், வீரய்யன்கண்மாய் வடக்கு பகுதியை சேர்ந்த 52 வயது பால முருகன் என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். மேலும் இவரது பேக்கில் மது பாட்டில் ஒன்றும் இருந்துள்ளது தெரியவந்தது. மேலும் இவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.