Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…மனக்குழப்பம் நீங்கும்…ஒற்றுமை பலப்படும்…!

மீன ராசி அன்பர்களே…!   இன்று தாய் சொல்லை எப்படியும் தட்டாமல் இருங்கள். அவரின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை கொள்ளுங்கள். பணிவு தன்மை இல்லை எனில் அதிகாரியுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தொழில் கொடுக்கல் வாங்கல் ஓரளவு சிறப்பாக அமைந்த பணம் கையில் வருவதில் சிக்கல்கள் இருக்கும். தாமதம் ஏற்படும் உச்சத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது.

பதவி உயர்வு சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த மனக்குழப்பம் தீரும்.  தெளிவான சிந்தனை இருக்கும். ஆனால் குழந்தைகள் பற்றிய கவலை மட்டும் இருந்து கொண்டே இருக்கும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். அதுபோல் காதலர்களின் பேச்சில் கண்டிப்பாக நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |