நடிகர் நடிகைகளின் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 4 மாதங்களாக கொரோனா பெருந்தொற்று நாட்டையே உலுக்கி எடுத்துக் கொண்டு இருக்கின்றது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்க்கின்றனர். ஒட்டுமொத்த பொருளாதாரமும் முடங்கி இருக்கின்றது. பலரின் வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது. மாநில அரசு நிதி சிக்கலை கடைபிடிப்பது போல பலரும் பல்வேறு பொருளாதார முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சென்னையில் காணொளி காட்சி மூலம் தயாரிப்பாளர்களிடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோரின் சம்பளத்திலும் 50 சதவீதம் குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவிடுத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பளக் குறைப்பு அடுத்த ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்தது. கொரோனா பாதிப்பு சூழல் சீரான பிறகு பழைய முறையில் சம்பளம் வழங்கப்படும் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதனால் கோடி கோடியாக சம்பளம் வாங்கிய நடிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களின் ஆசை நாயகன் சம்பளம் குறைகின்றது என்பதை அறிந்த ரசிகர்கள் பலரும் கவலை அடைந்துள்ளனர்.