கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் குயூக்கர் கரியர் (quicker carrier) என்ற வலைதளத்தில் வீட்டிலிருந்து வேலைச் செய்யும் பணியை தேர்வுச் செய்து வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். அப்போது வேலை விண்ணப்பத்திற்கான கட்டணமாக 29 ரூபாயை செலுத்த தனது வங்கி கணக்கை அனுமதித்துள்ளார். அப்போது ஹேக்கர்கள் அவரது கணக்கிலிருந்த 24 ஆயிரம் ரூபாயையும் திருடியுள்ளனர்.
ஆனால் யோகேஷ் தனது வங்கியில் பணம் குறைந்ததை கவனிக்கவில்லை. இதனையடுத்து மீண்டும் 26 ஆயிரம் ரூபாயை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். இந்த முறை தனது பணம் குறைந்ததை அறிந்த யோகேஷ் வங்கியை தொடர்புகொண்டுள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கிலிருந்த பணத்தை ஹேக்கர்கள் திருடியது குறித்து வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இது குறித்து யோகேஷ் சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.