Categories
உலக செய்திகள்

கொலை முயற்சி?… பிரதமர் வீட்டு காம்பவுண்ட் சுவரை உடைத்து சென்ற நபர்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கனடா பிரதமரை கொலை செய்ய முயற்சித்தே அவரது வீட்டிற்குள் நுழைந்ததாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 

கடந்த வாரம் வியாழன்கிழமை அன்று கனடா பிரதமர் வீட்டின் காம்பவுண்ட் கதவை Hurren என்பவர் தனது டிராக் மூலம் உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். பின்னர் இரண்டு மணி நேரம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த பட்ட பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பிரதமர் ஜஸ்டினின் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக அச்சமயம் வீட்டில் இல்லாமல் இருந்துள்ளனர். கனடிய பத்திரிகைகள் சில நீதிமன்றத்தில் இது கொலை முயற்சி என்று கூறி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.

வேண்டுமென்றே பிரதமர் உயிருக்கு ஆபத்து அல்லது அவரது அவருக்கு காயம் ஏற்படுத்தும் நோக்கத்துடனே Hurren  அவர் இல்லத்தில் நுழைந்ததாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தெரிவித்துள்ளன. Hurren  செய்த குற்றத்திற்காக 22 பிரிவின் கீழ் அவர் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு காவல்துறையினர் சமர்ப்பித்த ஆவணங்களில் அவரிடம் நான்கு துப்பாக்கிகள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |