வெடிகுண்டு மிரட்டலால் பல நீதிமன்றங்களின் பணியை முடக்கிய மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
ஜெர்மனியில் நேற்று காலை 7.30 மணி அளவில் Mainz நகரில் அமைந்துள்ள நீதிமன்றம் ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, மோப்பநாய் வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனை அடுத்து பல நீதிமன்றங்களுக்கு இதே போன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனால் பல மாவட்டங்களில் நீதிமன்றத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு காவல்துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக எந்த பொருளும் கிடைக்காத நிலையில் மிரட்டல் விடுத்தவர் யார்? எதற்காக இந்த மிரட்டல்கள்? என காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். மர்ம நபரின் இந்த மிரட்டலால் பல இடங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.