இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 42ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. உலக அளவில் அதிகமான கொரோனா பாதித்த நாடுகள் வரிசையில் 3ஆம் இந்தித்தில் இருக்கும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22752பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 7,42,417ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கு எகிறிக்கொண்டே சென்றாலும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது.
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 16,883 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் 4,35,831 பேர் இதுவரை சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கின்றார்கள்.2,64,944பேர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 482 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 20,642ஆக உள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,17,121 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, 1,18,558 பேர் குணமடைந்துள்ள நிலையில் 9,250 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழத்தில் – 1,18,594, டெல்லியில் – 1,02,831, குஜராத்தில் 37,550, உ.பி.யில் 29,968,தெலுங்கானாவில் – 27,612, கர்நாடகாவில் – 26,815, ஆந்திராவில் 21,197, கேரளாவில் – 5,894 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.