சென்னையில் இன்று காலை வரை கொரோனாவுக்கு 26 பேர் மரணம் அடைந்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 71,230 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 1,120 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தலைநகரில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்றது.ஆனால் ஏனைய மாவட்டங்களில் பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
சென்னையில் கொரோனா தொற்றால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் மரணம் அடைந்துள்ளார்கள். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தலா 5 பேர் உயிரிழந்து இருக்கின்றார்கள். அதே போல அரசு ஸ்டான்லி மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனைகளில் தலா 6 பேரும், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்கள்.