திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மேல மந்தை தெருவில் வசித்து வருபவர் செல்லத்துரை. கூலி வேலை செய்து வரும் இவருக்கு 15 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் உள்ளார்.
இந்தநிலையில், வத்தலகுண்டு பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர், தற்போது வத்தலகுண்டு பேரூராட்சியிலுள்ள 14வது வார்டு மேல மந்தை தெருவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளித்து வருகின்றார்.
இதற்கிடையே செல்லத்துரையின் வீட்டில் மனநலம் பாதிப்புக்குள்ளான மகள் தனியாக இருப்பதை அறிந்து, கிருமிநாசினி தெளிப்பதற்காகச் சென்ற சக்திவேல், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்தசம்பவம் குறித்து அறிந்த செல்லத்துரை வத்தலகுண்டு போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன், சப் -இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, சக்திவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.