Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதிலும் – அரசாணை வெளியீடு…. சேலம் மக்களுக்கு ஷாக் …!!

தமிழகத்தில் 1089 இடங்கள் நோய் கட்டுப்படுத்த பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பணிகள் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்பட்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக மாநிலம் முழுவதும் நோய் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் கண்டு,  கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசனையையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது . அந்தப் பகுதிகளை பொதுமக்கள் வெளியே செல்வதற்கும், அங்கு செய்யப்படும் கடைகள் திறந்து வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

இதன் அடிப்படையில் பார்க்கும் போது தமிழகம் முழுவதுமாக 1,089 இடங்கள் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருக்கிறது. மாவட்ட வாரியாக பார்க்கும் போது அதிகளவில் சேலத்தில் தான் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எண்ணிக்கையானது இருக்கின்றது. அங்கு மட்டும் 84 இடங்கள் கட்டுப்படுத்த பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் 158 இடங்களும், திருப்பத்தூர், திருவண்ணாமலையில் 84 இடங்களும், செங்கல்பட்டில் 29இடங்களும், கோயம்புத்தூரில் 13, கடலூரில் 59, திண்டுக்கல்லில் 14, மதுரையில் 75  இடங்கள் என தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் மூலமாக கொரோனாவை கட்டுப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முடுக்கி விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |