தங்கம் விலை சவரனுக்கு 416 ரூபாய் அதிகரித்திருப்பதால் இல்லத்தரசிகள் சோகமடைந்துள்ளனர்.
கடந்த பல நாட்களாக கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நகை கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இருந்தாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது தங்கம் சவரனுக்கு 416 ரூபாய் விலை ஏற்றம் கண்டிருக்கிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 416 ரூபாய் அதிகரித்து 37 ஆயிரத்து 424 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் 52 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 678 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை உயர்வை கண்டு இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.