மேற்குவங்க மாநிலத்தில் பெண்களை குறிவைத்து கொடூரமாக கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின் பூர்பா பர்தாமன் (Purba Bardhaman) மற்றும் ஹூக்லி (Hooghly) ஆகிய இரு மாவட்டங்களில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து 5 பெண்கள் சைக்கிள் செயினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அதுமட்டுமின்றி அவர்கள் பாலியல் பலாத்காரமும் செய்யப்பட்டிருந்தனர். இதனால் மேற்குவங்கமே அதிர்ந்து போனது. யார் இப்படி ஒரே பாணியில் 5 கொலைகளை செய்தது என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், 42 வயதுடைய கமருஸ்மான் சர்கார் (Kamruzzaman Sarkar) என்பவர்தான் இந்த கொடூர செயலை அரங்கேற்றி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
டிப் டாப்பாக உடையணிந்து ரெட் கலரில் ஹெல்மெட் அணிந்துகொண்டு பைக்கில் வலம் வரும் இவன், மின்சார அலுவலகத்திலிருந்து கணக்கெடுக்க வந்திருக்கிறேன் என கூறிக்கொண்டு மதிய நேரத்தில் தனியாக இருக்கும் பெண்கள் வீட்டுக்குள் புகுந்து விடுவான். பின்னர் அவர்களை பலாத்காரம் செய்துவிட்டு, பின் கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கியும், சைக்கிள் செயினை வைத்து கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளான். இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றி வந்த இவன், ‘செயின் கில்லர்’ என்று அழைக்கப்பட்டான்.
பள்ளி மாணவி ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட வந்த இவன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போலீசிடம் சிக்கினான்.. இந்த வழக்கு மீதான விசாரணை அங்குள்ள மாவட்ட கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் விசாரணை முடிந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.. அதில், கமருஸ்மான் சர்கார் தான் குற்றவாளி என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது.. அதனால் அவருக்கு தூக்கு தண்டனை வழங்குவதாக நீதிபதி தபன் குமார் மண்டல் அதிரடியாக உத்தரவிட்டார்.