Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BIG BREAKING: அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதி ……!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணிக்கு தற்போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் பிரமுகர்களுக்கு கொரோனா உறுதியாகி வருகின்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் அவர் அவருடைய உடல் முழுவதும் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர் கே சிங் சந்திப்பு நடைபெற்ற கூடிய நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்கவில்லை. இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சொல்லப்படுகின்றது.

Categories

Tech |