இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார் திமுக தலைவர் மு க ஸ்டாலின். அதே போல மருத்துவ படிப்புக்கான நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்திருக்கிறார்.
தமிழகத்தில் நீட்தேர்வு நடத்தினால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் எடுத்துரைத்துள்ள முக.ஸ்டாலின் இடஒதுக்கீடு ரத்தால் சமூகநீதி எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை கோடிட்டுக் காட்டி நீண்ட கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி உள்ளார்.