சென்னை, ஐயப்பன்தாங்கல் பகுதியில் வசித்து வருபவர் 29 வயதுடைய ஸ்ரீகாந்த் ராஜ்..இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கார் டிரைவராகப் பணிபுரிந்து வரும் இவர், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
பின்னர், சாப்பாடு வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ஸ்ரீகாந்த் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். அருகில் அமர்ந்து மது குடித்த நண்பர் கார்த்திக்கும் காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்து போன பாலசுப்பிரமணியன், உடனடியாக கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீகாந்தின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஸ்ரீகாந்துக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளை மணி கும்பலுக்கும் இடையே யார் பெரியவர் நீயா? நானா? என்ற போட்டி நிலவி வந்ததாகவும், இதன் காரணமாக இந்தக் கும்பல் ஸ்ரீகாந்த்தை கொலை செய்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், வெள்ளை மணி கும்பல் தலைமறைவாகி இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் மீது ஏற்கெனவே கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.