கருமந்துறையில் 10 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகேயுள்ள கருமந்துறையில் உமா கிளினிக் என்ற தனியார் மருத்துவமனை ஓன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவராக வெள்ளிமலை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய மதியழகன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து மருத்துவர், அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே அந்த மருத்துவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதனை கேள்விப்பட்ட அந்த மாணவி பெரும் அதிர்ச்சியடைந்தார்.. அதனைத் தொடர்ந்து அந்த மாணவி கருமந்துறை போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். புகாரின்பேரில் 16 வயது மாணவியை பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கருமந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மருத்துவர் மதியழகனை கைது செய்தனர். பின்னர் அவரை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிளை சிறையிலடைத்தனர். போக்சோ சட்டத்தில் மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.