Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தலையில் இடியாய் இறங்கிய செய்தி..! கவலையில் இல்லத்தரசிகள் …!!

தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து இருக்கின்றார்கள்.

கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையிலும் பொருளாதார நடவடிக்கைகள் முடக்கப்பட்டு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இருந்தும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இன்று சவரனுக்கு ஏற்பட்ட விலையேற்றம் இல்லத்தரசிகளை நடுங்க வைத்துள்ளது.

தங்கம் வாங்க தினமும் ஆசைகளோடு, கனவுகளோடு இருக்கும் பெண்கள் கொரோனா காலத்தில்  கையில் பணமின்றி வீட்டிற்குள் இருந்து கொண்டிருந்த நிலையிலும் கூட தங்க விலையேற்றம் இல்லத்தரசிகளுக்கு தலை இடி விழுந்ததை போல் இறங்கியுள்ளது.

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ரூ. 37,536க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 66 உயர்ந்து ரூ.4,692க்கு விற்கப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.10 உயர்ந்து ரூ. 54.40க்கு விற்கப்படுகின்றது. தங்கத்தின் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

Categories

Tech |