மின் கட்டணத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் எம்.எல் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மின் கட்டணம் நிர்ணயிப்பதில் முறைகேடு இருக்கின்றது. நான்கு மாதத்திற்கு சேர்த்து கட்டணம் நிர்ணயம் என்று வசூலிக்க்கும் வகையில் இது அமைந்திருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்க வேண்டும். ஊடகங்களுக்கு காலத்தில் வருமானம் இல்லாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால், அதனை செலுத்துவதற்கு சிரமப்படுவார்கள். வாழ்வாதாரத்தை இழந்து இருக்கிறார்கள் போன்றவற்றை குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, தமிழக அரசு, மின் பகிர்மான கழகம் ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற்றுதான் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக வெளியில் சென்று வீட்டில் இருக்கும் மக்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கி இருப்பதால் எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்தினார்கள் ? எவ்வளவு யூனிட் பயன்படுத்தியுள்ளோம் ? என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற குற்றச்சாட்டு அரசு சார்பில் முன்வைக்கப்பட்டது .
அதே போல மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற்று தான் கடந்த மாதம் கட்டணம் வசூல் செய்ததாகவும், அடுத்த மாதங்களில் கட்டணத்தை நிர்ணயிக்க இருப்பதாகவும், இதில் எவ்வித முறைகேடும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கிறார்கள். இதில் மக்கள் வீட்டிற்குள்ளே இருப்பதால் எவ்வளவு உநிட் பயன்படுத்தினார்கள் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை என அரசு வாதாடியது குறிப்பிடத்தக்கது.