Categories
சினிமா தமிழ் சினிமா

கவுதம் மேனனின் அடுத்த ரிலீஸ்… எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள்…!!!

கௌதம் மேனனின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்

இயக்குனர் கௌதம் மேனனை நாம் போலிஸ் அதிகாரி வேடத்தில் கடைசியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் பார்த்தோம். அதேநேரத்தில், “கார்த்திக் டயல் செய்த எண்”, என்ற குறும்படத்தை சிம்பு,  திரிஷாவை வைத்து  கவுதம் இயக்கி கொண்டிருந்தார். “ஒரு சான்ஸ் கொடு”, என்ற இசை ஆல்பத்தையும் இயக்கியுள்ளார். இதில் மேகா ஆகாஷ் மற்றும் கலையரசன் நடித்திருந்தனர். மேலும் இயக்குனர் கௌதம், சியான் விக்ரம் நடித்த, “துருவ நட்சத்திரம்” என்ற படத்தையும், வருண் நடித்திருந்த இமை போல் காக்க என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் அவர் தயாரித்த படங்கள் வெளியிடும் முன் நின்று போய்விட்டது. தற்போது “Covid 19: India’s war against the virus” எனும் ஹிந்தி படத்தை தமிழில் எடுத்துள்ளார். இப்படத்தை ஹிந்தியில் மனோஜ் பஜ்பாய் என்ற இயக்குனர் எடுத்துள்ளார். தமிழில் வரும் ஜூலை 16 ம் தேதியும், ஹிந்தியில் ஜூலை 20 ம் தேதியும் டிஸ்கவரி சேனல் வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |