இந்திய சினிமா வரலாற்றில் இனி யாராலும் அசைக்க முடியாத ஒரு சாதனையை சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த கடைசி திரைப்படத்தின் ட்ரெய்லர் செய்து காட்டியுள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புட் இந்த பெயரை கேட்டாலே ஒரு நொடி மௌனமாக நாம் வருத்தப்பட தொடங்கி விடுகிறோம். அதற்கான காரணம் வளர்ந்து வந்த ஒரு நட்சத்திரம் திடீரென தற்கொலை செய்து கொண்டது யாராலயும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்திய அளவில் மிக பிரபலமாக பேசப்பட்ட நபர்களில் முக்கியமான நபர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இவரது வளர்ச்சியை விரும்பாத பாலிவுட் சினிமாவில், சிலர் பல தடைகளை ஏற்படுத்தியதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலினால் தான் இவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது இப்போதுவரை குற்றச்சாட்டாக இருக்கிறது.
இது அனைத்திற்கும் தற்போது தக்க பதிலடி கொடுக்கும் விதமாக அவர் இறுதியாக நடித்த Dil Bechara என்ற திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது. இந்திய சினிமாவிலேயே இதுவரை யாரும் முறியடிக்க முடியாத ஒரு சாதனையை இந்த ட்ரைலர் முறியடித்துள்ளது. இரண்டு நாட்களில் 4 1/2 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த ட்ரைலரை பார்வையிட்டு உள்ளார்கள். குறைந்த நாட்களில் இத்தனை பார்வையாளர்களை சென்றடைந்த ஒரே படத்தின் ட்ரெய்லர் இதுவே ஆகும்.
ஆகவே இது அசைக்க முடியாத ஒரு சாதனையாக தற்போது இந்திய சினிமா வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் அவரது அந்த டிரைலருக்கு 80 லட்சத்திற்கும் மேல் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன. சுஷாந் சிங் ராஜ்புட் அவரது வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்களுக்கும், அவர் சினிமா இண்டஸ்ட்ரியில் இருக்கவே கூடாது என்று நினைத்தவர்களுக்கும் இந்த 80 லட்சம் லைக்குகள் தக்க பதிலடியாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.