Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் விவகாரம்…! ”எஸ்.ஐ உட்பட 5 பேருக்கு சிறை”… சிறிது நேரத்தில் உத்தரவு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மேலும் 5 காவலர்களை சிறையில் அடைக்க சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள்.

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை கொலை வழக்காக மாற்றி இது தொடார்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், இரண்டு உதவி காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்கள் என 5 பேரை கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சம்பவத்தன்று வேலை பார்த்து  அனைத்து காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடைபெற்றது.

அந்த வகையில் இன்று காலை எஸ்.ஐ பால்துரை உள்ளிட்டட  நான்கு காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் காலை முதல் விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது 5 பேருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடக்கின்றது. இதன்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இவர்கள் 5 பேரை சேர்த்து இந்த கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் 10 காவலர்களை கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |