Categories
அரசியல் மாநில செய்திகள்

இது புறக்கணிப்பது போன்றதாகும்… உங்க முடிவை உடனே மாத்துங்க… மோடிக்கு ஸ்டாலின் கடிதம் ..!!

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கெடுப்பதற்கான ஒரு கூறாக சம்பளத்தை சேர்க்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் பொருளாதார அளவுகோல் என்பது இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயரில் வகைப்படுத்துவதற்கான வருவாய் வரம்புக்குள் அவர்களது சம்பளத்தை சேர்ப்பது என்பது இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்ந்து சந்தித்து வரும் சமூக தடைகளை புறக்கணிப்பது போன்றதாகும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இட ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களுக்கு மாநில அரசுகளின் நடவடிக்கைகள் தேவைப்படுவதாலும் இம்முடிவு நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதாலும் குறிப்பாக நெருக்கடியான நேரத்திலும் முடிவை திரும்பப் பெற்று இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேபோல மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ததோடு, இட ஒதுக்கீட்டின்படி ஒதுக்கப்பட்ட பின்னர் சில இடங்களில் தனியாக வைத்திருப்பது உட்பட மாநில அரசுகள் தங்களுக்கென சொந்த தேர்வுமுறையை கடைபிடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் நீட்தேர்வு அறிமுகம் மருத்துவக் கல்வியில் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அவசர சட்டத்தின் மூலமாக உரிய திருத்தங்கள் கொண்டு வந்து, நீட் தேர்வை ரத்து செய்வதோடு மாநிலங்கள் தங்களது விருப்பப்படி தேர்வு செயல்முறையை வைத்துக் கொள்வதற்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொற்று நோயினால் நாடு ஆபத்தான சூழலில் இருக்கும் நிலையில் ஏற்கனவே நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகள் நீடிப்பதற்கும் அல்லது அதிகரிப்பதற்கான கொள்கை முடிவுகளை தொடர்வது நிலைமையை மேலும் சிக்கலாகி விடும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், இவற்றை கவனத்தில் கொண்டு இந்தியாவில் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவின நலனை பாதுகாப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரதமரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |