இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்து 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது
நேற்று மதியம் 3 மணி அளவில் ஜெர்மனி செக் குடியரசு இடையே இருக்கும் எல்லைப் பகுதியில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் இருக்கும் Nove Hamry மற்றும் pernink ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
நேருக்கு நேர் மோதிக் கொண்ட இரண்டு ரயில்களும் செக் குடியரசில் இருக்கும் karlovy vary மற்றும் ஜெர்மன் நகரமான Johangeorgenstadt ஆகிய நகரங்களுக்கு இடையே பயணம் செய்யும் ரயில்கள் ஆகும். தகவலறிந்த விரைந்து வந்த உதவிக்குழு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதோடு அந்த குழு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 30-ஐ எட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.