Categories
தேசிய செய்திகள்

இரவு வந்த போன் கால்… “வெளியே சென்ற புதுப்பெண்”.. தேடிச்சென்ற குடும்பத்தினர்… பின் கண்ட அதிர்ச்சி..!!

காதலித்து விட்டு  வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் புதுப்பெண் திட்டம்போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் கதாலி கிராமத்தைச் சேர்ந்த ருச்சி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் பெற்றோரின் ஏற்பாட்டினால் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்து ஏழு நாட்கள் ஆன நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ருச்சிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வர அதனை தொடர்ந்து தான் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை இரவு முழுவதும் குடும்பத்தினர் ருச்சியை தேடிவந்த நிலையில் மறுநாள் அதே ஊரில் இருந்த பண்ணை ஒன்றில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சோஹம்வீர் என்ற இளைஞனும் ருச்சியும் காதலித்து வந்ததும் ஆனால் ருச்சி குடும்பத்தில் உள்ளவர்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சோஹம்வீர் ருச்சிக்கு போன் செய்து தன்னைப் பார்க்க வரச் செய்து தான் தயாராக வைத்து இருந்த கூரான கத்தியால் ருசியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சோஹம்வீரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |