Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு தூக்குமாட்டி விட்டு… தற்கொலை செய்து கொண்ட தாய்.. கணவரால் ஏற்பட்ட விபரீதம்

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் 11 மாத குழந்தைக்கு தூக்கு மாட்டி விட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் கந்திலியை அடுத்த நார்சாம்பட்டியை சேர்ந்தவர்கள் சிலம்பரசன்-கவிதா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு பதினோரு மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் சிலம்பரசனுக்கு தொடர்பு இருப்பது கவிதாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே தகராறுஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளார் கவிதா.

சம்பவத்தன்று கணவன் வேலைக்கு சென்றதும் தனது 11 மாத குழந்தையை தூக்கில் மாட்டி விட்டு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகுநேரமாகியும் வீட்டைவிட்டு கவிதா வெளியில் வராததால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது கவிதா தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். குழந்தை அதிஷ்டவசமாக உயிர் பிழைக்க அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சிலம்பரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |