யூடியூபில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்பட பாடல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது
தமிழ் திரைப்படங்களின் டிரைலர்கள் ஒவ்வொரு முறையும் இணையதளத்தில் வெளிவரும் பொழுது அதிக அளவில் ரசிகர்கள் கண்டு மகிழ்வதோடு அதனை பதிவு செய்வதற்காகவும் பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பார். ஆனால் திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களுக்கு கிடைக்கும் ரசிகர்களின் வரவேற்பே பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. அவ்வகையில் ரசிகர்களால் யூடியூப்பில் அதிக அளவு கண்டு ரசிக்கப்பட்ட பாடல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
- மாரி திரைப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் 888 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
- 3 திரைப்படத்தில் இடம்பெற்ற Why This Kolaveri Di பாடல் 233 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
- கனா திரைப்படத்தில் இடம்பெற்ற வாயாடி பெத்த புள்ள பாடல் 163 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
- குலேபகாவளி திரைப்படத்தில் இடம்பெற்ற குலேபா பாடல் 149 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
- சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் இடம்பெற்ற சின்ன மச்சான் பாடல் 128 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது