டிக் டாக் போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடிய புதிய வசதி சோதனை முறையில் இன்ஸ்டாகிராம் செயலியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது:
நாட்டில் அதிக பயனாளர்களை கொண்டிருந்த டிக் டாக் செயலி சமீபத்தில் மத்திய அரசால் தடைசெய்யப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ” ரீல் ” அம்சத்தின் மூலம் டிக் டாக் போலவே பின்னணி இசையில் 15 நொடிகள் வீடியோவாக நடித்து பதிவிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 25 மொழிகளில் 10,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ள நிலையில் இந்தியாவிலும் முன்னணி இசை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில்,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிலும் ” இன்ஸ்டாகிராம் ” நிறுவனம் இந்த சோதனை முயற்சியை தொடங்கியுள்ளது.