கன்னட தொலைக்காட்சி நடிகர் சுஷில் கவுடா, மாண்டியாவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு வயது 36 ஆகிறது.. சுஷில் அவருடைய பெற்றோருக்கு ஒரே மகன் ஆவார். இவர் 2015ஆம் ஆண்டு முதல் கன்னட தொலைக்காட்சிகளில் நடித்து வந்தார். ஆனால் சுஷிலுக்கு இன்னமும் திருமணமாவில்லை.
இந்நிலையில் அவரை காணவில்லை என்று அவரது பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் அவர் கடந்த திங்கள்கிழமை (ஜூலை6) தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் புதன்கிழமை (ஜூலை8) தெரிவித்துள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் தெரியவில்லை..
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுஷில் குமாரின் தற்கொலை கன்னட தொலைக்காட்சி திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.