Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாடகை பிரச்சனை… உரிமையாளரை கழுத்தறுத்து கொன்ற இளைஞர்..!!

வீட்டு வாடகை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் உரிமையாளரின் கழுத்தை அறுத்து கொன்ற இளைஞரை போலீசார்  கைது செய்தனர்.

சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் பண்டார தெருவில் குணசேகரன்(வயது 50) என்பவருக்குச் சொந்தமான வீட்டில் தன்ராஜ் என்பவர் ரூ 4,000 வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த சூழலில் கொரோனா ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாததால் கடந்த 4 மாதங்களாக தன்ராஜால் வாடகை கொடுக்க முடியவில்லை.. இதனால் குணசேகருக்கும், தன்ராஜ் குடும்பத்தினருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் தான் நேற்று (ஜூலை 8) நள்ளிரவு மதுபோதையிலிருந்த தன்ராஜ் மகன் அஜித் (வயது 21) தான் வைத்திருந்த பெரிய கத்தியால் குணசேகரின் கழுத்தை கரகரவென அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதையடுத்து இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்த கிடந்த குணசேகரன், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்றத்தூர் போலீசார், குணசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும், தப்பிச் சென்ற அஜித்தை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |