Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனி நமக்கு பயம் வேண்டாம்…. நாடு முழுவதும் மகிழ்ச்சி…. மத்திய அரசு அதிகாரபூர்வ தகவல்….!!

மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிட்டால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே சென்றாலும், குணமடைந்தவர்கள் வீதமும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள்.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி விட்டதா ? என்ற கேள்வி பரவலாக கேட்கப்பட்டுக்கொண்டு இருந்தது. அண்மையில் கூட கர்நாடகா மற்றும் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர்கள் தங்கள் மாநிலத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறி விட்டது என்று வேதனை தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து தற்போது டெல்லியில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்திற்கு பின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இதுகுறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் கூறும் போது, சில இடங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக இருந்தாலும், இந்தியாவின் சமூக பரவலாக மாறவில்லை. மக்கள்தொகை அதிகமாக இருப்பதால் பாதிப்பு அதிகமாக இருப்பது போல் தெரிகிறது. உலகளவில் ஒப்பிடும்போது ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியிருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருக்கிறார். இதனால் மக்கள் மத்தியில் இருந்த ஒரு பீதி தற்போது குறைந்து விட்டது. மத்திய அமைச்சரின் இந்த பேட்டி நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

Categories

Tech |