தன்னை நோக்கி குரலை உயர்த்தி சத்தமாக பேசியதால் 10 வயது மகளை இரக்கமின்றி அவரது தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானை சேர்ந்தவர் ஹுசைன் அலெஃப் (Hussein Alef).. இவருக்கு 10 வயதில் ஹடித் (Hadith Orujlu), என்ற மகள் உள்ளார்.. இந்நிலையில் சம்பவத்தன்று தன்னை நோக்கி குரலை உயர்த்தி சத்தமாக பேசிய ஒரே காரணத்துக்காக்க பெல்ட்டால் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார் கொடூர தந்தை.
அதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினரிடம், மகளை கொலை செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்று விசாரணை நடத்தியபோது தான் இந்த குற்றச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனையடுத்து ஹுசைனை காவல்துறையினர் கைது செய்தனர்.. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், என் பேச்சை கேட்காமல் குரலை உயர்த்தி சத்தமாக பேசியதால் நான் ஆத்திரம் அடைந்தேன்.. அந்த நேரத்தில் என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.. அதனால் மகளை கொலை செய்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் சில ஆண்டுகள் ஜெயிலில் இருந்துவிட்டு பிணைத்தொகை செலுத்திவிட்டு வெளியே வந்துவிடலாம் என்று நினைத்ததாகவும் கூறியுள்ளார்.. ஈரானில் கொலை செய்வது பெரிய குற்றம் என்ற போதிலும், தந்தை அல்லது பாதுகாவலரால் கொல்லப்பட்டால் விலக்களிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.