Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வெறும் 1 வருஷத்துக்கு இருக்கும்… யாரும் அரசியல் செய்யாதீங்க…. மத்திய அரசு விளக்கம் …!!

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சில பாடங்களை நீக்கியது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் விளக்கம் அளித்துள்ளார்.

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சில பாடங்களை நீக்கியது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால்,  ட்விட்டர் பக்கத்தில் விளக்கத்தை அளித்து இருக்கிறார். அதில், சிபிஎஸ்சி பாடப்பிரிவில் முக்கியமான பாடங்கள்,  குறிப்பாக இறையாண்மை உள்ளிட்ட முக்கியமான சில பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாகவும், தயவுசெய்து குழந்தைகளின் கல்வி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.  குழந்தைகளுக்கு நல்ல கல்வியை புகுத்தி நல்ல முறையாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது வெறும் ஏதோ குறிப்பிட்ட பாடப் பிரிவில் மட்டும் நீக்கப்படவில்லை. ஒவ்வொரு படங்களிலும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. உயிரியலில் சில முக்கியமான பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளது.  அதேபோல இயற்பியல், வேதியியல் என ஒவ்வொரு பாடப் பிரிவுகளிலும் சில கடினமான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது. இது கொரோனா காலத்தில் மாணவர்களின் சுமையை குறைப்பதற்கான நடவடிக்கையே தவிர, நிரந்தர நடவடிக்கை  இல்லை. இது இந்த ஒரு ஆண்டுக்கு மட்டுமே இருக்கும் என்பதையும் அவர் மிகத் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.

இது சம்பந்தமாக ஏற்கனவே சிபிஎஸ்சி நிர்வாகம் அனைத்து பள்ளிகளுக்கும் விளக்கங்களை அளித்து இருப்பதாகவும், இது சம்பந்தமான நாடு முழுவதும் இருக்கக்கூடிய கல்வியாளர்களிடம் கலந்தாலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெளிவாக தெரிவித்துள்ளார். சிபிஎஸ்சி 30% பாடத்திட்டம் நீக்கம் என்பது இந்த ஒரு ஆண்டுக்கு மட்டும் தான். இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |