சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிக்னல்களில் கூட்டம் சேர்வதை தடுக்க காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக முன் களப்பணியாளர்களாக இருந்துவரும் காவல்துறையினரும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னையில் இருக்கக்கூடிய சுமார் 10க்கும் மேற்பட்ட சிக்னல்களில் குறைவான நொடிகளே வாகன ஓட்டிகள் நிறுத்தக் கூடிய வகையில் போக்குவரத்து போலீசார் இன்று முதல் ஒரு திட்டத்தை அமல் படுத்தி இருக்கிறார்கள்.
குறிப்பாக அடையார், கிண்டி , அண்ணா சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்பட சுமார் 10க்கும் மேற்பட்ட சிக்னல்களில் 60 நிமிட நொடிகளுக்கு குறைவாகவே இயக்குவதற்காக தானியங்கி மூலம் இயக்காமல் போக்குவரத்து போலீசாரை சிக்னல்களை இயக்க முடிவு செய்திருந்தார்கள். அதனடிப்படையில் இன்று காலை போக்குவரத்து போலீசார் மிகக்குறைவான நொடிகளே சிக்னலை இயக்கினார்.
சிக்னல்களில் வாகன ஓட்டிகளின் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கக் கூடாது, அதை குறைப்பதற்காக இதுபோன்ற ஒரு வழிமுறையை போக்குவரத்து போலீசார் செய்து இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.இன்று காலையில் இந்த நடைமுறை பின்பற்ற பட்டதாகத் தெரிகின்றது. இந்த நடைமுறை சரியான முறையில் சென்றால், அது அனைத்து பகுதிகளிலும் கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.