தேவையான பொருட்கள்:
- சேமியா -100 கிராம்
- எண்ணெய் -தேவையான அளவு
- மிளகாய் தூள் -தேவைக்கேற்ப
- கடலைமாவு -2 ஸ்பூன்
- அரிசி மாவு -1 ஸ்பூன்
- உப்பு -தேவைக்கேற்ப
- வெங்காயம் -2 நீளவாக்கில் நருக்கியது
- புதினா -நருக்கியது ஒரு கைப்பிடி
செய்முறை:
சேமியாவை 5 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரம் ஒன்றில் கடலை மாவு, அரிசி மாவு ,உப்பு, மிளகாய்த்தூள், நறுக்கிய வெங்காயம், புதினா இவற்றை சேர்த்து கிளறவும்.
இதனுடன் சேமியாவையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு கிளறி விடவும்.
அதன் பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானது இந்த கலவையை பக்கோடா வடிவில் மாற்றி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான சேமியா பக்கோடா ரெடி…