Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த … இதை மட்டும் குடிங்க …!!

ஆயுர்வேதத்தில் பாரம்பரிய மருத்துவப் பொருளாக வெந்தயம் பயன்படுகிறது. இதில் பலவித நன்மைகள் உள்ளன. வெந்தயத்தில் டையோஸ்ஜெனின், நியாசின், நார்ச்சத்து, புரோட்டீன்கள்,  பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும்  வைட்டமின்-சி போன்ற பலவித சேர்மங்கள் உள்ளன. வெந்தயத்தை உண்பதால் நமக்கு பலவித உடல் உபாதைகள் நீங்கும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் எதுக்களித்தல் பித்தம் போன்ற அமிலத்தன்மை பிரச்சனைகள் நீங்கும்.

அதுமட்டுமின்றி  உடலில் உள்ள சூட்டை குறைக்க வெந்தயம் மிகவும் உதவுகிறது.வெந்தய விதைகள் மூட்டு வலி, மூட்டு வீக்கம், நீரிழிவு நோய் மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்க  உதவுகிறது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் உடலில் ஏற்படும் மாற்றங்களை  குறைக்க வெந்தய விதைகளை உண்ணலாம்.

Categories

Tech |