Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மீண்டும் களத்தில் இறங்க வேண்டும்” ஆர்வம் காட்டும் ரோகித் மற்றும் ரகானே..!!!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மீண்டும் களமிறங்க காத்திருக்கிறோம் என தங்களது விருப்பத்தை இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ரோகித் சர்மா, ரகானே தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாதம் 13-ம் தேதி முதல் நடக்க இருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்றின் காரணமாக நடைபெறவில்லை. 117 நாட்களுக்குப் பிறகு நேற்று இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் அரங்கேறியது. இப்பொழுது வரை கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வராத நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் துணிச்சலாக இந்த போட்டிக்காளை ஏற்பாடு செய்துள்ளது.

உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கான ஏற்பாடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்டநாட்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் பழைய நிலைக்கு திரும்பிய நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ரகானே மீண்டும் கிரிக்கெட் களத்தில் இறங்கி கலக்க தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |