10-07-2020, ஆனி 26, வெள்ளிக்கிழமை
இராகு காலம் – பகல் 10.30-12.00
எம கண்டம்- மதியம் 03.00-04.30
குளிகன் காலை 07.30 -09.00.
இன்றைய ராசிப்பலன் – 10.07.2020.
மேஷம்
நண்பர்களின் ஆலோசனை உங்களின் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வேலையில் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் நல்ல பலனைக் கொடுக்கும்.
ரிஷபம்
தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் நஷ்டம் இருக்காது. பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். செய்ய நினைக்கும் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
மிதுனம்
சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு உண்டு. குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். வேலையில் உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
கடகம்
தேவையில்லாத மன உளைச்சல் உண்டாகும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் தொடர்பாக கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிலும் நிதானம் இல்லாத நிலை உண்டாகும்.
சிம்மம்
எடுக்கும் காரியங்களில் புதிய உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனை தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
கன்னி
குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டு. வருமானம் பெருகும். தாராள பணவரவு உண்டாகும். வியாபாரம் தொடர்பாக உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
துலாம்
குடும்பத்திலுள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.
விருச்சிகம்
சுபகாரிய முயற்சிகளில் மந்தநிலை ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் உண்டாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
தனுசு
பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் நீங்கும்.
மகரம்
குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். மன அமைதி குறையும். சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
கும்பம்
சுப காரியங்கள் கைகூடும், அதற்கான அறிகுறிகள் தென்படும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் திறமையுடன் நடந்து கொள்வதால் மதிப்பு உயரும்.
மீனம்
உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். பொருளாதார நிலை சற்று மந்தமாக காணப்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோத்தில் இருப்பவர்கள் வேலையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும்.