சிம்ம ராசி அன்பர்களே…! இன்றைய நாள் உங்களுக்கு விரயங்கள் கூடுதலாக இருக்கும். அதிகப்படியான விழிப்புணர்ச்சி உங்களுக்கு இருக்கும். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொஞ்சம் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். உள்ளத்தில் அமைதி கூட உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். ஒரு சிலர் எதிர்பார்த்து காத்திருக்கும் பதவி உயர்வு விரும்பிய இடத்துக்கு மாறுதல் வந்துசேரும். புதிதாக வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும்.
மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டும். கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் கொஞ்சம் கவனமாகவே நீங்கள் செயல்பட வேண்டும். வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து யாருக்கும் போடக்கூடாது. அதேபோல பணத்திற்காக நீங்கள் பொறுப்புகள் ஏதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள் பேச்சில் கண்டிப்பாக நிதானம் வேண்டும்.
கோபம் கொஞ்சம் அவ்வப்போது தலைதூக்கும். இன்று காதலர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் இது கருநீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. கருநீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: கரு நீலம் மற்றும் வெள்ளை நிறம்.