சிபிஎஸ்இ தேர்வு முடிவு குறித்த தகவலுக்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவுகள் வராமல் வீட்டிலேயே காத்து இருக்கின்றனர். இதனால் அவர்கள் உயர்கல்விக்கு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் சிறிது நேரத்துக்கு முன்பாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது என்ற செய்தி காட்டு தீயாய் பரவியது.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவு வருகின்ற 13 ஆம் தேதியும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு 11ம் தேதியும் வெளியாகும் என்ற நாடு முழுவதும் பரவியது. இதனால் தேர்வு முடிவை எதிர்நோக்கி காத்திருந்த மாணவர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் தேர்வு முடிவு குறித்த தகவல் வெறும் வதந்தி என்று சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்வு முடிவு குறித்து மறுப்பு தெரிவித்து சிபிஎஸ்இ இதற்கான அறிக்கை வெளியிட்டு உள்ளது.எனவே 11 , 13 ஆம் தேதிகளில் சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியாகும் என்பது முற்றிலும் தவறானது.
A fake message is being circulated with regard to the declaration of Class 12 and Class 10 Board Results 2020. The Board has not yet announced the result dates: Central Board of Secondary Education (CBSE) https://t.co/z0WGQcIaBW pic.twitter.com/ecIsHH3jch
— ANI (@ANI) July 9, 2020